தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
இதன்படி, நாளை பிற்பகல் சேலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்நாடு – திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரதமர் மோடி எதிர்வரும் 30ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளதுடன் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளார். குறித்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் எல்.முருகனை ஆதரித்து மோடி பிரசாரம் செய்யவுள்ளார்.
இதற்காக தாராபுரம் – உடுமலைக்குச் செல்லும் பகுதியில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுவதுடன் ஹெலிகொப்டர் இறங்குதளமும் அமைக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரதமரின் விஜயத்தையிட்டு தாராபுரம் நகர் தேசிய பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.