சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டுள்ள கப்பல் மீட்பு நடவடிக்கைக்காக எகிப்திற்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு மேலும் பல கப்பல்கள் வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை அங்கு 350 க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் செயற்பாடுகள் அங்கு கப்பல் தொடர்ந்தும் தரித்து நிற்பதால் மேலும் ஒரு சிக்கலை உருவாக்குகிறது.
இருப்பினும் ஏ.பி. மோல்லர்-மெர்ஸ்க் மற்றும் மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் தென்னாபிரிக்காவைச் சுற்றியுள்ள பகுதிகள் ஊடக கப்பல்களைத் திருப்பி விடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
மணல் அகழ்வுகள் இடம்பெற்றுவரும் அதேவேளை இதுவரை 18 மீட்டர் ஆழத்தை எட்டியுள்ளதாக சுயஸ் கால்வாய் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.