கொவிட்-19 ஜபின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப்பெற்றால், அவர்கள் சமூகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கொவிட் -19 தொற்றுக்கான தேசிய செயலணி தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்றிட்டம் தொடர்பாக, இன்று (திங்கட்கிழமை) தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்கள், ஏற்கனவே கொவிட்-19 ஜபின் தடுப்பூசி போடப்பட்டவர்களாக இருப்பினும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
இதன்போது பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைத்தால், அவர்கள் வருகைதந்த2 ஆம் நாள் முதல் சமூகத்தில் நுழைய முடியும்.
இருப்பினும் வெளிநாட்டவர்களுக்கு வெவ்வேறு வகையான தடுப்பூசிகள் கிடைப்பெறுகின்றன. ஆகையினால் 7வது நாளில், பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வெளியேறலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.