ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்படும் என நம்புவதாக அக்குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை செயற்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்ய ஜனாதிபதி பெப்ரவரி 19 அன்று ஆறு பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவை நியமித்தார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான குறித்த குழுவில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பதிரண, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.