போரின் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக கட்டப்படுகின்ற சந்தஹிரு சேயா தூபியில் பதிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரத்தினங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தேவின் அறிவுறுத்தலின் பேரில், இரத்தினம் மற்றும் நகை ஆணையகத்தின் தலைவர் திலக் வீரசிங்க, குறித்த இரத்தினங்களை பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவிடம் ஒப்படைத்துள்ளார்.
இவைகளை இரத்தின வியாபாரிகள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நன்கொடையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே நன்கொடையாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.