முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகைக்கு செல்லவுள்ளார்.
இதன்போது அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றுக்கொள்ளவுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக ஆளும் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாகவே இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனிவழி செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின் நிறைவில் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலையினைத் தோற்றுவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.