ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
போரூரில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஆட்சி மாற்றம் என்பது தி,மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளை மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது அல்ல. அப்படி செய்வதால் ஆட்கள் மாறுவார்கள். ஆனால் நிர்வாகம் மாறாது.
கடந்த 50 வருடங்களாக செய்யாத நல்லதை 5 ஆண்டுகளில் எப்படி செய்வார்கள் என நம்புகிறீர்கள். கல்வி மானுட உரிமை. அதை கொடுப்பது அரசின் கடமை.
நான் வாக்குக்காக நிற்கவில்லை. நாட்டுக்காக நிற்கிறேன். அதிமுகவின் வெற்றி என்பது நிகழ்வு. நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி” எனத் தெரிவித்துள்ளார்.