சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.
குறித்த வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் மையங்களில ஜாமர் பொருத்த அவசியமில்லை” உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.