புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
அத்தோடு கொரோனா பரவுவதைத் தடுக்க தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பண்டிகை காலத்திற்குப் பின்னர் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உலகின் சில பகுதிகளில் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 62% அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.