மேற்கு வங்க மாநிலம் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியது.
குறித்த மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றது.
இரண்டாம் கட்டமாக நடைபெறுகின்ற இந்த தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுகின்ற நந்திகிராமம் தொகுதியும் உள்ளடங்குகிறது.
குறித்த தேர்தலில் 19 பெண்கள் உள்ளிட்ட 171 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.
அதேநேரம் அசாம் மாநிலத்திற்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியது.
குறித்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.