வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கான ஊதிய வருவாய்க்கான வரி விலக்கு தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ நிதிச் சட்டம் 2021 திருத்தம் என்பது, வருமான வரி சட்டத்தில், வரி விதிப்புக்கு உட்பட்டது. இதன்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுவாழ் இந்திய குடிமக்களின் ஊதிய வருவாய் மீதான வரிவிதிப்பு முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.