டெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 2790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நாட்களை விட அதிகமாகும்.
இந்நிலையிலேயே அவர் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக ஒரு சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.