கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு ஒன்றாரியோ மருத்துவர்கள் மாகாண அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
டுவிட்டர் வழியாக வெளியிட்ட 100க்கும் மேற்பட்ட ஒன்றாரியோ மருத்துவர்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த கடிதத்தில், மாகாணத்தின் மீண்டும் திறக்கும் கட்டமைப்பை கடுமையாக விமர்சித்துள்ள மருத்துவர்கள், வைரஸ் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கும் போது மாகாணம் தீவிர சிகிச்சை பிரிவு திறனை ஒரு அளவுகோலாக பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.
வைரஸின் மாறுபாடுகள் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாகாணத்தின் மட்டுப்படுத்தப்பட்ட தடுப்பூசி வழங்கல் குறித்தும் மருத்துவர்கள் எச்சரித்தனர்.