தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்ட்டாப்படவுள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த சுகாதார வழிமுறைகள் அடங்கிய கோவை வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அபாயம் இருப்பதாகவும் அதைத் தடுக்க இந்த தொடர் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நோய் மீண்டும் அதிகரிப்பதைத் தடுக்க கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சுகாதார வழிமுறைகள் அடங்கிய கோவை