துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘ அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
சட்டப்பேரவை தேர்தல் : மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்!
தமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.கஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினும் வாக்களித்துள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், “ குடும்பத்துடன் வந்து ஜனநாய கடமையை ஆற்றியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக வாக்களித்து வருகின்றனர். இதனுடைய முடிவு மே 2ஆம் திகதி சிறப்பாக இருக்கும். இது உறுதி” எனத் தெரிவித்தார்.
அதேசமயம் திமுக போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் தேர்தலை நிறுத்தக்கோரி மனு அளிக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த அவர், ஆளும் கட்சிக்கு தோல்வி பயத்தினால் எப்படியாவது தேர்தலை நிறுத்துவதற்கு முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதேநேரம் பா.ஜ.க தமிழக தலைவர் எல்.முருகன் வாக்களித்துள்ளார். அத்துடன் விருகம்பாக்கத்தில் தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்துள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை, தெலுங்கான ஆளுநராக இல்லாம் ஒரு பிரஜையாக தனது வாக்கினை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா பரவலை கருத்திற் கொண்டு பாதுகாப்பாக வாக்களிக்குமாறும், உரிய நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருமாறும் கேட்டுக்கொண்டார்.