வென்னாபுவ ஏ.எஸ்.பி எரிக் பெரேரா இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழழை) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.முஜிபுர் ரஹமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வீரசேகர, பெரேராவுடன் மேலும் 30 பொலிஸ்அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் வென்னாபுவ ஏ.எஸ்.பியின் இடமாற்றத்தில் எந்ததொரு முறைக்கேடும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை கடமைகளை ஏற்றுக்கொண்ட புதிய அதிகாரி, பெரேராவை விட தனது வேலையைச் சிறப்பாகச் செய்கிறார் எனவும் அமைச்சர் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
எரிக் பெரேரா தற்போது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார் என அவர் கூறியுள்ளார்.