புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கக்கூடாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இணைந்து சிறிய அளவிலான விழாக்களை நடத்த அனுமதித்துள்ளன என்றும் கூறினார்.
இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதால், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து பொருத்தமான அனுமதியைப் பெற வேண்டும் என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.