தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது, காலை 11 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியாகியுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் 11 மணி வரையில் 26.29 வீதம் பேர் வாக்களித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
அதில், அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 வீத வாக்குகளும் சென்னையில் 23.67 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, புதுச்சேரியில் காலை 11 மணிவரை 20.07 வீதம் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் 19.92 வீத வாக்குகளும் காரைக்காலில் 20.7 வீத வாக்குகளும் மாஹேயில் 15.46 வீத வாக்குகளும் ஏனாமில் 24.17 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.