இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் முதலாவது அலையை விட வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் புதிதாக 1 இலட்சத்து 15 ஆயிரத்த 269 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 27 இலட்சத்து 99 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 17 இலட்சத்து 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 8 இலட்சத்து 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 631 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 66 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.