இந்தியாவில் கொரோனா நோய்த்தொறின் பாதிப்பு அதிகரித்தால் தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் என சீரம் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, நாட்டில் புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் குறைந்துவிட்டால், ஜூன் மாதத்திற்குள் அஸ்ட்ராசெனகா அளவுகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க முடியும் என கூறியுள்ளார்.
இருப்பினும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பதால் அதிக தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
ஏனெனில் இந்திய சீரம் நிறுவனம் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் இலங்கைக்கான அடுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்காக முடிந்தவரை விரைவாக முயற்சித்து விரைவுபடுத்த இந்திய அரசு மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கையில் உள்ள யுனிசெப்பின் துணை பிரதிநிதி எம்மா ப்ரிகாம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.