தமிழக சட்டசபை தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இரவு ஏழு மணிவரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 வீதமான வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் புதுச்சேரியில் 81.55 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தயபிரதா சாகு தெரிவிக்கையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து அனுப்பும் பணியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அதன்படி 71.79 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றதாகவும், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78 வீதமும், நாமக்கல்லில் 77.91 வீதமும், அரியலூரில் 77.88 வீதமும், வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் குறைந்த பட்சமாக சென்னையில் 59.04 வீதமும் செங்கல்பட்டில் 62.77 வீதமும், நிருநெல்வேலியில் 65.16 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் வாக்குபதிவு இயந்திரத்தை தூக்கிச் சென்ற சம்பவம் எதுவும் பதிவாகவில்லை எனவும், பறக்கும் படைநிலை கண்காணிப்பு குழு கலைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.