மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தான் போட்டியிடும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான தடாகம் வீதியில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கோவை தெற்கு தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்ற கமல்ஹாசன், அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து ஏனைய தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையையும் கமல்ஹாசன் பார்வையிட்டுள்ளார்.