ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மிக ஆபத்தான நோய் ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்ததற்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாதப் பொருளாகியுள்ளது.
இதனால், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியுள்ளது.


















