பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 10 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாம் தீர்மானித்திருந்த இலக்கை ஒருவாரத்துக்கு முன்பாகவே எட்டியுள்ளோம்.
இந்த சாதனையை எட்ட உதவியாக இருந்த மருத்துவர்கள், ஊழியர்கள், தாதியர் என அனைவருக்கும் எமது நன்றிகள். இது ஒரு மகத்தான திருப்தி’ என கூறினார்.
எனினும், பிரான்ஸில் கொரோனாத் தொற்று வீதமானது, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது கொரேனாத் தொற்று வீதமானது 100.000 பேரிற்கு 404ஆக உள்ளது.
கொரோனா பரிசோதனையில் 8 சதவீதம் தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை 4,939,258பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 98,065பேர் உயிரிழந்துள்ளனர்.