எத்தியோப்பியாவின் மேற்கு காம்பெல்லா பிராந்தியத்தில் தெற்கு சூடானில் இருந்து ஆயிரக்கணக்கான புகலிடம் கோருவோர் பல மாதங்களாக பயங்கரமான நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மருத்துவ தொண்டு எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
தெற்கு சூடானியர்களுக்கு உணவு உதவி உள்ளிட்ட முக்கியமான சேவைகளுக்கான அணுகல் இல்லை என்று எம்.எஸ்.எஃப். குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒகஸ்டில் தங்கள் சொந்த பிராந்தியமான ஜொங்லேயில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தப்பிய குடும்பங்களை எட்டு மாதங்களாக ஒரு வரவேற்பு மையத்தில் தங்க வைத்துள்ளதாகவும் முதலில் ஒரு குறுகிய காலத்திற்கு வைத்திருக்கும் மையமாக இது இருந்ததாகவும் எம்.எஸ்.எஃப். தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 16,000 தென் சூடான் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறிய, வேலி அமைக்கப்பட்ட, மற்றும் நெரிசலான இடத்தில் குடியேற்றங்களுக்குள் சிக்கியுள்ளதாக தொண்டு நிறுவனம் கூறுகிறது.
மழைக்காலம் விரைவில் தொடங்குவதால், இந்த இடம் சதுப்பு நிலமாக மாறி மலேரியா சுமக்கும் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் என்று நிறுவனம் அஞ்சுகிறது. இந்த பருவத்தில் கொவிட்-19 பரவுவதற்கான ஆபத்து குறித்து எம்.எஸ்.எஃப் கவலை தெரிவித்துள்ளது.