கொள்முதல் விலைப்பட்டியலை தயாரிக்கத் தவறியதால் சீன எரிசக்தி நிறுவனத்தின் விற்பனை வரி பதிவை சிந்து வருவாய் வாரியம் (எஸ்.ஆர்.பி) நிறுத்தியுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்/எஸ் சீனா எலக்ட்ரிக் இன்ஜினியரிங் குழுமமான டான்ஜின் எலக்ட்ரிக் பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய அறிவிப்பில், எஸ்.ஆர்.பி வரி செலுத்துவோரின் ஆய்வில் நிறுவனம் சில ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க தவறிவிட்டது என்று தெரியவந்துள்ளது என்று த நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
பெரிய கொள்முதல் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சீன எரிசக்தி நிறுவனம், அசாதாரண வரி விபரங்களை வைத்திருந்தமை மற்றும் சிந்து விற்பனை வரி வருமானத்துடன் கொள்முதல் விலைப்பட்டியலை இணைக்கத் தவறிவிட்டது என பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
2020 பெப்ரவரி 26 மற்றும்2020 மார்ச் 16ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட முந்தைய வரி அறிவிப்புகளுக்கு இணங்க நிறுவனம் தவறிவிட்டது என்றும் உள்ளீட்டு வரி உரிமைகோரல்களை சரிபார்ப்பதன் காரணமாக வெளியிடப்பட்ட சிந்து விற்பனை வரி வருமானத்தில் ஏப்ரல் 2019 வரிக் காலத்திலிருந்து சரி செய்யப்பட்டதாகவும் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவை விதிகளின் விற்பனை வரியை மீறியதன் அடிப்படையில், எஸ்.ஆர்.பி நிறுவனத்தின் விற்பனை வரி பதிவை நிறுத்தியதுடன் 2021 ஏப்ரல் 12க்குள் தீர்வு நடவடிக்கை எடுக்குமாறும் அந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.பி நிறுவன அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆஜராகி பதிவு விவரங்கள், பாஸ்போர்ட், விசா, எஸ்.இ.சி.பி பதிவு சான்றிதழ், எஃப்.பி.ஆர் பதிவு சான்றிதழ், குத்தகை ஒப்பந்தம், குத்தகை ஆவணங்கள், கடைசியாக செலுத்திய மின்சார விலைபத்திரம் மற்றும் வங்கி அறிக்கை உள்ளிட்ட பதிவு விபரங்களை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.