கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக 60 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்தின் பெரும் பகுதியை உற்பத்தி செய்யும் இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்துக்கு அனுப்பப்பட்டும் தடுப்பு மருந்து அளவு பெரும் அளவில் குறைந்துள்ளது.
இதனால், சில ஏழை நாடுகள் உட்பட 60 நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்படுவது நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதேநேரம், முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு 2ஆவது டோஸ் செலுத்த மருந்து இல்லை என்றும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக அதன் விநியோகம் கடந்த 5ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து விநியோகங்களும் ஜூன் மாதம் வரை நிறுத்தப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு மருந்துகளை வாங்கும் நடவடிக்கைகளை சுகாதார அமைப்பு விரைவுப்படுத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.