ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 30இலட்சத்து ஒன்பதாயிரத்து 541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 78ஆயிரத்து 964பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 16ஆயிரத்து 738பேர் பாதிக்கப்பட்டதோடு 106பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 59ஆயிரத்து 377பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 515பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 71ஆயிரத்து 200பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.