தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 559பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 86ஆவது நாடாக விளங்கும் தென்கொரியாவில் இதுவரை ஆயிரத்து 768பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 614பேர் பாதிக்கப்பட்டதோடு 3பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழாயிரத்து 682பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 105பேரின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.