பிரித்தானியாவின் மற்ற பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், இங்கிலாந்திலும் பூங்காக்கள், கடைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பன மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு அயர்லாந்திலும் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் உட்பட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
இந்நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்துவதைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டம் ஒன்றுக்கு பிரதமர் ஜோன்சன் திட்டமிட்டிருந்த போதும் எடின்பர்க் டியூக் இறந்ததைத் தொடர்ந்து அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மூன்று மாதங்களுக்கும் மேலாக அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி கிடைக்காத்தமையினால் இன்று போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.