ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆய்வு முடியும் வரை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
தற்போதுவரை அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால், மூன்று கோடியே 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஐந்து இலட்சத்த 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.