ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அவர்களுடன் இணைந்து நேட்டோ படை வீரர்களும் வெளியேறுகின்றனர்.
36 நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் 7,000 வீரர்களை வெளியேற்றுவது தொடர்பாக நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் தலைமையில் பெல்ஜியத்தில் நேற்று (புதன்கிழமை) ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் முக்கிய தலைவர்கள் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மே முதலாம் திகதி முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டது. திரும்பப்பெறும் நடைமுறை சில மாதங்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் தங்கள் 2500 படை வீரர்களை முழுவதையும் திரும்ப்பெறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.