மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு இராணுவ ஒத்திகை நடந்துள்ளது.
99 வயதில் இறந்த இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், நாளை மறுதினம் சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.
இந்தநிலையில் மறைந்த இளவரசர் ஃபிலிப்பிற்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு நேற்று (புதன்கிழமை) இராணுவ ஒத்திகை நடைபெற்றது.
இதனிடையே பக்கிங்ஹாம் அரண்மனை மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இதுவரை வெளியிடாத புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது.
இதில் இளவரசர் ஃபிலிப் மற்றும் அரசி எலிசபெத் ஆகியோருடன் ஏழு பேரக்குழந்தைகளும் காணப்படுகின்றனர்.