அரசாங்கத்தின் ஆலோசனையின் கீழ் புதிய திட்டங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு இல்ல ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம்.
இது பராமரிப்பு இல்லவாசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
78.9 சதவீத வயதுவந்த பராமரிப்பு இல்ல ஊழியர்கள் ஒரு அளவு தடுப்பூசியை பெற்றுள்ளதாக இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து முழுவதும், சராசரியாக, 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுகளுக்கு எதிராக குறைந்தபட்ச அளவிலான பாதுகாப்பை வழங்க 80 சதவீதம் ஊழியர்களுக்கும் 90 சதவீதம் குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அரசாங்க அறிவியல் ஆலோசகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தற்போது, அனைத்து லண்டன் பெருநகரங்கள் உட்பட 150 உள்ளூர் அதிகாரப் பகுதிகளில் 89இல், ஊழியர்களின் தடுப்பூசி வீதம் 80 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 27 உள்ளூர் அதிகாரசபை பகுதிகளில் 70 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்கள் ஒரு அளவைப் பெற்றுள்ளனர்.