இந்தியாவில் தடுப்பூசி திருவிழா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 28 இலட்சத்து 98 ஆயிரத்து 314 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது.
இது குறித்த புள்ளிவிபரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 16 இலட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி திருவிழாவின் ஆரம்ப நாளில் (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டதால் 29 இலட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரையில் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.