பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து 285பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில் இதுவரை 15ஆயிரத்து 594பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 11ஆயிரத்து 429பேர் பாதிக்கப்பட்டதோடு 148பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 527பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 750பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து ஐந்தாயிரத்து 164பேர் பூரண குணமடைந்துள்ளனர்.