இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.
இதன்படி சுந்தர்கர், சம்பல்பூர், மல்கன்கிரி, பர்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களிலும், மேலும் 3 மணி நேரம் கூடுதலாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.