கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலம் சட்டம், நிறைவேற்று அல்லது நீதித்துறைக்கு சவாலாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொழும்பு துறைமுக நகரம் சீனாவிற்கு சொந்தமானகும் என்ற அறிக்கைகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என குறிப்பிட்ட அமைச்சர், அந்தவகையில் கொழும்பு துறைமுக நகரத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.
சட்டங்கள் தொடர்பான பொதுவான நடைமுறையை அரசாங்கம் தவிர்க்கவில்லை என்றும் எந்த நேரத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும் நாட்டின் முன்னேற்றத்தை நாசமாக்குவதற்கான பல முயற்சிகள் தோல்வியுற்றுள்ளன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.