பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி
பிரபல நடிகர் விவேக்கின் மறைவு அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி, ருவிற்றரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விவேக்கின் நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறையும் மக்களிடத்தில் கொண்டுசெல்லப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.
The untimely demise of noted actor Vivek has left many saddened. His comic timing and intelligent dialogues entertained people. Both in his films and his life, his concern for the environment and society shone through. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 17, 2021
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பல இலட்சம் மரங்களை மண்ணில் விதைத்த இலட்சிய மனிதர், தனது திரையுலகக் கருத்துக்கள் மூலம் தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்ட சின்னக்கலைவாணர் விவேக்கின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் விவேக்கை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கலைத்துறையினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், விவேக்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல லட்சம் மரங்களை மண்ணில் விதைத்த லட்சிய மனிதர்,தனது திரையுலக கருத்துக்கள் மூலம் தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்ட @Actor_Vivek சின்னக்கலைவாணரின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு. (1/2) pic.twitter.com/8n34EYb0L4
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 17, 2021
மு.க.ஸ்டாலின்
சின்னக் கலைவாணர் விவேக்கின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர் எனவும் சூழலியல் ஆர்வலர் மற்றும் ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என தனது ருவிற்றர் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
‘சின்னக் கலைவாணர்’ @Actor_Vivek அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.
தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்?
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/JFARJPEj2e
— M.K.Stalin (@mkstalin) April 17, 2021