கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து அவர், தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக குமாரசாமி, தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை செய்துக்கொண்டதில், எனக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே என்னுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதுடன் பரிசோதனைக்கும் உட்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் பதிவேற்றியுள்ளார்.