இந்தியாவில் புதிதாக 2,34,692 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 1,341 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 2,34,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று 1,341 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் 1,23,354 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளமையை தொடர்ந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16,79,740 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.