இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மே மாதம் 3 ஆம் திகதிவரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகைளையும் இரத்து செய்ய ஹொங்கொங் தீர்மானித்துள்ளது.
இது குறித்து ஹொங்கொங் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் இருந்து ஹொங்கொங் செல்லும் அனைத்து விமானங்களுமே மே மாதம் 3 ஆம் திகதிவரை இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடனான விமானச் சேவையும் இரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம், விஸ்தரா விமானத்தில் ஹொங்கொங் வந்த சுமார் 50 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.