உலகளவில் கொரோனா தொற்று அதிகரிப்பதை கருத்திற்கொண்டு வெளிநாட்டவர்கள் இலங்கை வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் மூன்றாவது மற்றும் நான்காவது அலை காரணமாக பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், இலங்கையில் கொரோனா தொற்றின் நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது, இருப்பினும் மீண்டும் அதிகரிக்காமல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து திரும்புவர்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான தனிமைப்படுத்தல் நடவடிக்கையை செயற்படுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 3,480 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்றும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.