புதுடில்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவசர தூதரக சேவைகளுக்காக +91-11-23010201 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது slhc.newdelhi@mfa.gov.lk என்ற மின்னஞ்சலிலோ அழைக்குமாறு உயர் ஸ்தானிகராலயம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.