சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) இரண்டாவது தொற்றலை தீவிரமடைந்துள்ள நிலையில், சிறையிலுள்ள 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
41ஆம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடிய சிம்பாப்வே 3,000க்கும் மேற்பட்ட கைதிகளை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 320 கைதிகளை அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சிறைச்சாலைகள் நிரம்பிவழிவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால், 37,751பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,553பேர் உயிரிழந்துள்ளனர்.