நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் விஜயதாசராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு தொழில்முறை நிபுணராகவும் சிந்திக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கட்சிக்குள்ளும் நாட்டினுள்ளும் சர்வதேச அளவிலும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும், பல தசாப்தங்களாக நம் நாட்டுக்கு உதவுகின்ற நாடுகளிலிருந்து நாட்டை பிரிப்பதற்கும் அவர் ஒரு பயனற்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
அமைச்சு, சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் முயற்சிகள் காரணமாக உலகளாவிய தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டார்.
அண்டை நாடான இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டிலும் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில் அனைவரதும் கடின உழைப்பின் காரணமாக நாட்டில் தொற்று பரவலா குறைந்தவடைந்து வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தையும் அதன் உறுப்பினர்களையும் பலவீனப்படுத்த அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டார்.