கத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று நாளை மறுதினம் 2 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.