வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில், தேர்தல் முடிவுகள் தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்திருந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள சத்தியபிரதா சாகு, கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும், 1000 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
இதனால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்தது. இந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 2 ஆம் திகதியன்று எண்ணப்படவுள்ளன.
வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேசைகளும் அதிகமாகவுள்ளன. இதனால் அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதமாகலாம் ‘ எனத் தெரிவித்துள்ளார்.