இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று ஒரேநாளில் (திங்கட்கிழமை) 2 இலட்சத்து 56 ஆயிரத்து 947 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 53 இலட்சத்து 14 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 31 இலட்சத்து 3ஆயிரத்து 220 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 20 இலட்சத்து 30 ஆயிரத்து 944 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 757 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 80 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.