கொரோனா பரவலை எதிர்வரும் சில மாதங்களுக்குள் உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம், சில மாதங்களில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து சாதனங்களும் தற்போது உலக நாடுகளிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.
அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
செல்வம் பொருந்திய, வளர்ச்சியடைந்த நாடுகள் இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதெநேரம், மத்திய கிழக்கு நாடுகளில் தேவை அதிகமாக உள்ள இடங்களுக்கு தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்றும் டெட்ரோஸ் இதன்போது தெரிவித்தார்.